15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கியதாகக் கூறப்படும் உறவினர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் – இலிப்பதெனிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளார்.
குறித்த மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுள்ளார்.
தனது இளைய தம்பியுடன் பாட்டியின் வீட்டில் குறித்த சிறுமி வசித்து வருகிறாள்.
பாட்டியின் வீட்டுக்கு அடிக்கடி வந்த சிறுமியினது தாயின் சதோரனின் மகன் (சிறுமியின் மச்சான்) சிறுமியுடன் இரவு பொழுதுகளில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேத்தியின் உடல் நிலையில் மாற்றத்தை அவதானித்த பாட்டி அவரை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சிறுமி கர்ப்பிணியாகி இருப்பது தெரியவந்தது. அதனை அடுத்து பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
தனக்கு நடந்தவற்றை சிறுமி பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.