கட்டாய பாலியல் தொழிலாளர்கள் 100 பேர் மீட்பு..!

474

ajஆர்ஜண்டீனா தலைநகர் புவனெஸ் ஏயரீஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 100 பெண்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் பராகுவே மற்றும் பெரு ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பெண்களை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தமை தொடர்பில் 25 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

பாலியல் தொழில் நடத்தப்பட்டுவந்த பல இடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆர்ஜண்டீனாவில் இளம் பெண்பிள்ளைகள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் பெருமளவில் இடம்பெற்றுவருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.



2008-ம் ஆண்டில், ஆர்ஜண்டீனாவில் ஆட்கள் கடத்தப்படுவது ஒரு குற்றச்செயலாக அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர், ஆயிரக் கணக்கானோர் கடத்தல்காரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.