துப்பாக்கி-2: விஜயைவிட அதிக சம்பளம் பெற்ற முருகதாஸ்..!

491

vijayகதாநாயகன் விஜய்யை விட, அவரை இயக்கும் முருகதாஸ் அதிக சம்பளம் கேட்டுப் பெற்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

துப்பாக்கி படத்தில் விஜய்யை முதல் முதலாக இயக்கினார் ஏஆர் முருகதாஸ். அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் ரூ 8 கோடி ப்ளஸ் ஹிந்தி ரைட்ஸ்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இப்போது அதே படத்தை ஹிந்தியில் பிஸ்டல் என்ற பெயரில் உருவாக்கி வரும் முருகதாஸ், அடுத்து இயக்கும் தமிழ் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகம்.

இதில் முக்கிய விடயம் இப்படத்திற்காக விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கியவர் ஏ ஆர் முருகதாஸ் தானாம்.



படத்துக்கு தலைப்பு கூட துப்பாக்கி 2 என்றே வைத்திருக்கிறார்.

வெளியில் ஆயிரம் கருத்து சொன்னாலும், காசுன்னு வந்துட்டா கறாக இருக்கும் முருகதாஸ், இந்தப் படத்தின் ஹீரோ விஜய்யைவிட இரண்டு கோடி அதிகமாக சம்பளம் கேட்டு, அதில் ஒரு பகுதியை அட்வான்ஸாகவும் பெற்றுள்ளாராம். அதாவது ரூ 20 கோடி!

தலைவாவில் குனிந்த தலையும் முதுகும் நிமிரும்வரை இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமல் போவதுதான் நல்லது என அமைதியாகிவிட்டாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜில்லா வெளியான கையோடு துப்பாக்கி 2 படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.