தொடரை கைப்பற்றியது இந்தியா – தவான் அதிரடி..!

425

dhawanஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் கன்பூர் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.



துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 164 பந்துகளுக்கு முகங்கொடுத்து 119 ஓட்டங்களையும் யுவராஜ் சிங் 91 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2:1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.