இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களை உடனடியாக தடை செய்ய பாகிஸ்தான் நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானில் 10 சதவீதம் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை வழங்கவும் அதில் 6 சதவீதம் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது ஊடக ஒழுங்குமுறை ஆணையர் கமில் அலி அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்து இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்.
மேலும் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழு அறிவுறுத்தலின் படி எதிர்மறையான கருத்துக்களையும் குழந்தைகள் மனம் பாதிக்குபடியான உள்ளடக்கங்களையும் கொண்ட நிகழ்ச்சிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களின் கலாச்சாரத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப கூடாது என எச்சரித்தார்.
இந்த சட்டத்தை உடனடியாக பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.