பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெனியகொட – கெகுலுகமுவ பிரதேசத்தில் தனது வீட்டில் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
54 வயதான நபர் நேற்று மாலை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.
கணவன் – மனைவிக்கிடையிலான சண்டையைத் தொடர்ந்து மனைவியினால் பொல்லால் தாக்குதலுக்குள்ளான இந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.