காத்தான்குடியில் கடல் கொந்தளிப்பு: ஒருவர் காயம், படகுகள் சேதம்..!

440

kathanகாத்தான்குடியில் இன்று அதிகாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்ததுடன் ஐந்து மீன்பிடிகளும் முழுமையாக சேதடைந்துள்ளன.

காத்தான்குடியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மீன் பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்து அப்படகுகளின் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து கரைக்கு வந்த பாரிய கடல் அலைகள் இந்த படகுகளை சேதப்படுத்தியதுடன் இந்த படகுகளை மீட்க முயன்ற மீனவர் ஒருவர் படுகாமடைந்துள்ளார்.

இதில் காயமடைந்த மீனவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி படகுகளும் இயந்திரங்களும் சேதடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

சேத விபரங்களை காத்தான்குடி பொலிசார் மற்றும் மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.

மாரிகாலம் ஆரம்பித்துள்ளதால் இந்த காலப்பகுதயில் அடிக்கடி கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு மீனவர்கள் செல்வதில்லை என்பதும் இங்கு குறி;ப்பிடத்தக்கது.