புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடித்தது அவுஸ்திரேலியா..!

437

ausதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை அரசாங்கம் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை அவுஸ்திரேலியா மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளது.

இந்த அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மாத்திரமன்றி அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையையும் அவுஸ்திரேலியா நீடித்துள்ளது.



இதன்படி புலிகள் அமைப்பிற்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 32 நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.