ரொம்ப கவனம் ஸ்ருதி: மகளுக்கு உலகநாயகன் அட்வைஸ்..!

508

kamalமும்பையில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்று தன் மகளுக்கு அறிவுரை கூறியுள்ளாராம் கமலஹாசன்.

நேற்று முன்தினம் கமல் ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாஸன் அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார்.

சட்டென்று சுதாரித்துக் கொண்டதால், பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்தார்.

இந்த சம்பவம் பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது. மேலும் சக நடிகர், நடிகைகள் இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ருதியின் தந்தை கமல்ஹாசன் நேற்று முன்தினம் மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த அவர் இதுகுறித்து கூறுகையில், நேற்று ஸ்ருதியுடன் பேசினேன். அவர் இப்போது மும்பையில் நலமாக உள்ளார் அவருக்கு நான் சொன்னதெல்லாம், இது மும்பை, நாமதான் ரொம்ப கவனமா இருக்கணும், இன்னும் ரொம்ப விழிப்போட இருக்கச் சொன்னேன் என்று கூறியுள்ளார்.