சமந்தாவுடன் டூயட் பாடும் சூர்யா..!

396

samanthaசூர்யா – லிங்குசாமி இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

சிங்கம் 2வின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவர்களுடன் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், ராஜ்பால் யாதவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று மும்பையில் தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறவுள்ளது.



இயக்குனர் லிங்குசாமி இப்படத்தை மூன்று செட்யூளில் முடிக்க திட்டமிட்டுள்ளார். திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா சார்பில் லிங்குசாமி தயாரிக்கும் இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை மும்பையிலும், ஹைத்ராபாத்தில் 20 சதவீதமும் காட்சிப்படுத்தவுள்ளனர்.

இப்படத்திற்கு உலகிலையே முதன் முறையாக ரெட் டிராகன் டிஜிட்டல் கமெராவை சந்தோஷ் சிவன் பயன்படுத்தப்போவது குறிப்பிடத்தக்கது.