முதலில் ஆரம்பம் ரீமேக், அடுத்து நேரடியாக அஜீத் – பிரபுதேவா திட்டம்..!

470

ajithஅஜீத்தை இயக்க ஆசைப்படுகிறார் மசாலா மன்னன் பிரபுதேவா. இந்நிலையில் அவர் தான் ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் மசாலா மன்னன் என்று பெயர் எடுத்துள்ளார் பிரபுதேவா. அவரிடம் ரீமேக் படங்களை கொடுத்தால் நச்சுன்னு எடுத்து பட்டுன்னு ஹிட்டாக்கிவிடுவார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஆரம்பம் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்கவிருக்கிறார். முன்னதாக அவர் பிரபுதேவாவின் சிறுத்தை ரீமேக்கில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்தார். படமும் ஹிட்டானது.



ஆரம்பம் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ரவுடி ராத்தோரில் சேர்ந்த அக்கியும், பிரபுவும் இந்த படத்திலும் சேர்வார்கள் என்று தெரிகிறது.

பிரபுதேவாவுக்கு அஜீத் குமாரை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்க ஆசையாக உள்ளதாம். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துவிட்டு அஜீத்தை அணுகுவார் என்று கூறப்படுகிறது.

ஷாஹித் கபூர், சோனாக்ஷியை வைத்து பிரபுதேவா இயக்கிய ஆர்…ராஜ்குமார் படம் வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி ரிலீஸாகிறது. இந்த படத்தை பிரபுதேவா பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.