வவுனியா கலைஞர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு..!

433

வடமாகாண கல்விப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சருக்கும் வவுனியா கலைஞர்களுக்கும் இடையில் வவுனியாவில் இன்று வியாழக்கிழமை சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டக் கலைஞர்கள் அரங்க செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பயிற்சிக்கூடங்கள் இன்மை, சிறந்த வசதிகளுடன் கூடிய மண்டம் இன்மை, அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் வருகையின்போது பரதக்கலையை வீதியில் அரங்கேற்றுமாறு பணிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மேலும் மத்திய, மாகாண மற்றும் இந்து கலாசார அமைச்சின் கீழ் செயற்படுவதாக மூன்று கலாசார உத்தியோகத்தர்கள் காணப்படுகின்மையால் ஏற்படும் முரண்பாடுகள், பிரதேச மற்றும் மாவட்ட கலாசார பேரவைகள் அரசு சார்ந்து காணப்படுவதால் கலைஞர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் போன்ற பிரச்சினைகளையும்; கலைஞர்கள் முன்வைத்தனர்.

இது தவிர வவுனியாவில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் மா மன்றம் ஆகிய மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டன.



கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கலாநிதி அகளங்கன் தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

vavuniya1 vavuniya2 vavuniya3