சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக ஜான்மைக்கோல் குன்ஹாவை கர்நாடகா அரசு நியமித்தது.
இந்நிலையில், நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முன்பு விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா தாம் பணியில் தொடர விரும்பவில்லை என்றதாகவும், நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து கர்நாடக அரசின் பதில் மனுவிற்கு 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டுமென்று ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.