பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள நபருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 22 வருட கடூழிய கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க கலேபொல குற்றவாளிக்கு 22 வருட கால கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், 3000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனை செலுத்த மறுத்தால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
2010 ஏப்ரல் 17ம் திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபருக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
அநுராதபுரம் வன்னியக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.