வவுனியா மாவட்ட 11 ஆவது சாரணர் ஒன்றுகூடலில் தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் விபுலாநந்தா கல்லூரி முதலிடம்..!

1090

வவுனியா மாவட்ட சாரணர் சங்கம் நடாத்திய சாரண மாணவர்களுக்கான 11 வது மாவட்ட ஒன்றுகூடல் 15/11/2013 காலை 9.00 மணி தொடக்கம் 17/11/2013 மாலை 4.00 மணி வரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாவட்ட ஆணையாளர் திரு எம் .எஸ்.பத்மநாதன் தலைமையில் நடை பெற்றது.

வவுனியா மாவட்ட சாரண பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி ஒன்றுகூடலில் இவ் வருடம் 169 புள்ளிகளை பெற்று விபுலாநந்தா கல்லூரி முதலிடத்தையும் 163 புள்ளிகளை பெற்று ஓமந்தை மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும் 154 புள்ளிகளை பெற்று வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அத்துடன் சாரணர் அறிவுத்திறன் போட்டியில் முதலாம் இடத்தை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த க.யதுகனேஷ் அவர்களும் இரண்டாம் இடத்தை விபுலாநந்தா கல்லூரியை சேர்ந்த யோ.சதுர்சிகனும் மூன்றாம் இடத்தை கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த த.கிரிதரனும் பெற்று கொண்டனர்.

நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் பங்கு பற்றி சிரேஷ்ட பிரிவில் முதலிடத்தை பூந்தோட்ட மகா வித்தியாலயத்தை சேர்ந்த எம்.தனுயனும் இரண்டாம் இடத்தை பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த வி.விதுசனும் மூன்றாம் இடத்தினை நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தை சேர்ந்த ச.தனுசனும் பெற்று கொண்டனர்.



கனிஷ்ட பிரிவு மரதன் ஓட்ட போட்டியில் முதலாம் இடத்தை விபுலாநந்தா கல்லூரியை சேர்ந்த ஆர்.ரொஜீபன் அவர்களும் இரண்டாம் இடத்தினை போகஸ்வெவ மகா வித்தியாலயத்தை சேர்ந்த எல்.நளின் தினேஷ் அவர்களும் மூன்றாம் இடத்தினை ஓமந்தை மத்திய கல்லூரியை சேர்ந்த யு.லக்சனும் பெற்று கொண்டனர்.

சாரணர் கைத்திறன் போட்டியில் முதலாம் இடத்தை விபுலாநந்தா கல்லூரியும் இரண்டாம் இடத்தினை நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயமும் ,வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயமும் பெற்று கொண்டன .

ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் முதலாம் இடத்தினை நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தினை ஓமந்தை மத்திய கல்லூரியும் மூன்றாம் இடத்தினை பூந்தோட்டம் மகா வித்தியாலயமும் பெற்று கொண்டன.

பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் முதலாம் இடத்தினை ஓமந்தை மத்திய கல்லூரியும் இரண்டாம் இடத்தினை மாதர் பணிக்கர் மகிழங்குள உயர்தர கனிஷ்ட வித்தியாலயமும் மூன்றாம் இடத்தினை போகஸ்வெவ மகா வித்தியாலயமும் பெற்று கொண்டன.

இவ் போட்டிகளுக்கான வெற்றி கிண்ணங்களை கோவில்குளம் இளைஞர் கழகத்தின் பின்லாந்து கிளையினர் அன்பளிப்பாக வழங்கிவைத்தனர்.

2 3 4 8 5 6 7