சவுதியில் தங்கியிருக்கும் 1500 பேரை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை..!

1174

saudiபொது மன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடந்த 3ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்த காலப்பகுதிக்குள் சவுதியை விட்டு வெளியேறாது தொடர்ந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களை கைது செய்து சிறைத்தண்டனை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பொது மன்னிப்புக் காலப்பகுதிக்குள் 1500 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.



இவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் கீழ் தங்கியிருப்பதாகவும் அவர்களை மீண்டும் இலங்கை அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.