திருமண பந்தத்தில் இணையவுள்ளார் ஸ்ரீசாந்த்..!

425

srisanthதடை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அரச குடும்பத்தைதச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே டிசம்பர் 12ம் திகதி குருவாயூரில் திருமணம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீசாந்த்தை திருமணம் செய்யப்போகும் பெண்ணின் பெயரை இதுவரை வெளியிடாமல் வைத்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இருப்பினும் இது காதல் திருமணம் என்கிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது அந்தப் பெண்ணும், ஸ்ரீசாந்த்தும் சந்தித்து காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீசாந்த்துக்கு மேட்ச் பிக்ஸிங் சோதனை வந்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தாராம் இப்பெண். மேலும் தேவையான சட்ட உதவிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தாராம்.



அந்தப் பெண் மட்டுமல்லாது, அவரது குடும்பமும் ஸ்ரீசாந்த்துக்கு ஆதரவாக இருந்ததாம். இதையடுத்து திருமணத்தை முடிவு செய்து விட்டனர்.