சுயசரிதை எழுதும் ஷகிலாவின் வருத்தம்..!

909

shakeelaகவர்ச்சி நடிகை ஷகிலா சுயசரிதை எழுதுகிறார். சினிமாவில் சந்தித்த கசப்பான அனுபவங்களையும் திரையுலகின் இருட்டு பக்கங்களையும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். இதனால் மலையாள நடிகர்கள், டைரக்டர்கள் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுயசரிதையை வெளியிடக்கூடாது என்று ஷகிலாவுக்கு மறைமுக மிரட்டல்களும் வருகிறதாம். எதிர்ப்புகளை மீறி சுயசரிதையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ஷகிலா.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதுகுறித்து ஷகிலா கூறியதாவது:–

சினிமாவில் வரும்போது உடம்பை முழுவதும் மறைத்துக் கொண்டு குடும்பபாங்காக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு கவர்ச்சி வேடங்கள் கொடுத்து கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர். இதற்காக வருத்தம் இல்லை. நான் சுயசரிதை எழுதுவதால் திரையுலகில் இருக்கும் சிலர் பயப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை.



என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத்தான் புத்தகமாக வெளியிடுகிறேன். நான் சினிமாவில் அறிமுகமானபோது சினிமாவில் பலர் உதவியும் செய்து இருக்கின்றனர். நடக்காத எதையும் நான் எழுதவில்லை. அழுது அழுதுதான் இதை எழுதி இருக்கிறேன். புத்தகம் தயாராகி விட்டது. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் இதனை வெளியிடப்போகிறேன்.

இவ்வாறு ஷகிலா கூறினார்.