அமெரிக்க கடற்படை வீரர்கள் சுமார் 300 பேர் தெற்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ´சான்சலர்வில்லி´ என்ற போர் கப்பலில் இருந்து ஆளில்லா உளவு விமானங்களை ஏவி ஒத்திகை பார்த்தனர்.
கப்பலில் இருந்து சீறி புறப்பட்ட ஒரு ஆளில்லா உளவு விமானம் இயந்திர கோளாறினால் திசை திரும்பி போர் கப்பலை தாக்கியது.
எதிர்பாராத இச்செயலினால் கடற்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், கப்பலுக்கோ, இதர வீரர்களுக்கோ பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கடற்படை செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.