பிரான்சின் மறைந்த சர்வாதிகாரி நெப்போலியனின் உயிலின் நகல் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கடந்த 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்ட நெப்போலியன், தன் வாழ்வின் இறுதி நாட்களை செயின்ட் ஹெலினா தீவில் கழித்தார்.
அங்கு தன்னுடைய இறப்பிற்கு 21நாட்களுக்கு முன் எழுதிய உயில், பிரான்சில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது.
நெப்போலியனின் ஆலோசகர் பியர் என்பவர் எழுதிய இந்த உயிலின் நகல் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும்,ஆனால் 20 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்ந உயலில், தனக்கு கிடைத்த ஆபரணங்கள், தங்கம், உடைகள் குறித்த தகவல்கள், ஐரோப்பிய கலாசாரம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் தன் வாழ்நாளின் கடைசி ஆறு ஆண்டுகளில், தன்னுடைய மனநிலை குறித்தும் எழுதியுள்ளார். மேலும் இறப்புக்குப் பின் தன்னை எரித்துக் கிடைக்கும் சாம்பலை பாரிசில் உள்ள சீன் நதியில் தூவும்படி எழுதியுள்ளார்.
இருப்பினும் அவரது ஆசையை நிறைவேற்றப்படாமல்,இறந்து 19 ஆண்டுகளுக்கு பின் பாரிசில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.