2 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் 2வது கணவரால் கொல்லப்பட்டமை அம்பலம்..!

425

murderசுமார் இரண்டறை வருடங்களுக்கு முன்னர், தனது இரண்டாவது கணவரால் கழுத்து நெறித்து கொல்லப்பட்ட பெண்ணொருவர் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி தனது தாயைக் காணவில்லை என, மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த முறைப்பாட்டின் படி மேலும் தெரியவருவதாவது,

47 வயதுடைய குறித்த இளைஞரின் தாய், தனது கணவரை விட்டுவிட்டு 2005ம் ஆண்டு பிரிதொரு நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.



பின்னர் இத்தாலிக்கு வேலை வாய்ப்பை பெற்றுச் சென்ற அவர், மீண்டும் 2009ம் ஆண்டு நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, பிலியந்தலை – மடபாத பகுதியில் வீடொன்றை விலைக்கு வாங்கி அதில் தனது 2வது கணவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அந்தப் பெண்ணின் இரு மகன்மாரிடமும் அவர் மீண்டும் இத்தாலிக்கு சென்றுவிட்டதாக 2வது கணவர் கூறியுள்ளார்.

பின்னர் படிப்பதற்காக இங்கிலாந்துக்குச் சென்ற இரு மகன்களும் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு திரும்பி வந்து தனது தாயைக்கான பிலியந்தலையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த பெண்ணின் 2வது கணவரால் வீடு விற்கப்பட்டுள்ளதோடு, குறித்த நபரும் அங்கில்லை என தெரியவந்துள்ளது.

இந்த முறைப்பாடின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மிரிஹான விசேட குற்றாப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றையதினம் குறித்த பெண்ணின் 2வது கணவரான சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

ஜா-எல, கம்மெத்த பகுதியில் வைத்தே இவர் கைதாகியுள்ளார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 21.04.2011 அன்று இரவு வேளையில் பிலியந்தலை, மடபாத வீட்டில் வைத்து அந்தப் பெண்ணை கழுத்து நெறித்து கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் கொல்லப்பட்ட பெண்ணின் போலி கையெழுத்தையிட்டு, குறித்த வீட்டை 40 இலட்சம் ரூபாவுக்கு விற்றுள்ளார்.

சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மிரிஹான விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.