ரஷ்யாவின் கஸன் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க முயன்ற போயிங் 737ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 50 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் டட்டர்ஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது உள்ளூர் நேரப்படி இரவு 7.25 மணிக்கு ஓடுதளத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் 44 பயணிகள், 6 விமான சிப்பந்திகள் உள்பட 50பேர் பலியானதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.