சினேகா கர்ப்பமா? அதிர்ச்சியடைந்த தொலைக்காட்சி நிறுவனம்..!

491

snekaநடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் சென்ற வருடம் நவம்பர் மாதம் 9ம் திகதி காதல் திருமணம் நடந்தது.

சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது இந்த வருடம் நவம்பர் மாதத்தில் சினேகா தனது இரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியை சொல்லியிருக்கிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதுதான் சினேகா கர்ப்பமான செய்தி. சினேகாவின் இரசிகர்களுக்கு இந்த செய்தி சந்தோஷமாக இருந்தாலும், அவரை இன்னும் இரண்டு வருடங்களுக்கு திரையில் பார்க்க முடியாது என்பது வருத்தமான செய்திதான்.

சினேகா குழந்தை பிறந்து, அந்த குழந்தை இரண்டு வயதாகும்வரை இனிமேல் சினிமா, படப்பிடிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார்.



இதனால் சினேகாவின் இரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, ஒரு மிகப்பெரிய நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றது.

சினேகாவை வைத்து ஒரு பிரமாண்டமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று முடிவு செய்து ஒரு பெரிய தொகையை சினேகாவுக்கு முன்பணமாக கொடுத்திருந்தது.

தற்போது சினேகா அந்த தொலைக்காட்சி தொடரை தன்னால் நடத்த முடியாது என்று கூறி வாங்கிய முன்பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டார்.

அந்த தொலைக்காட்சி தொடரை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியவுடன் சினேகா தற்போது மறுக்கிறார் என்பதை அறிந்து தொலைக்காட்சி நிறுவனம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.