பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை இழந்த மொரிஷியஸ்..!

370

morபொதுநலவாய அரச தலைவர்களது 2015ஆம் ஆண்டு மாநாடு மொரிஷியஸில் இடம்பெற மாட்டாது மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் இம்முறை ஆரம்பமாகியுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் கலந்து கொள்ளவில்லை.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கை, மனித உரிமைகளை மதிக்கும் விஷயத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதால் மொரிஷியஸ் பிரதமர் இலங்கை மாநாட்டை புறக்கணித்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.



இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை மொரிஷியஸ் இழந்துள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டை அடுத்தமுறை நடத்தவுள்ள நாடு அதற்கு முன்னதாக நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.