சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த இலங்கை, பொத்துவில் பகுதியைச் சேரந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை – பொத்துவில் அல் இர்பான் பாடசாலை பகுதியில் வசித்துவரும் கபூர் என்பவரின் மகனான (வயது 26), அஸ்வர் முஹம்மட் என்பவரே நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
13ம் திகதி இரவு நேர ஆகாரத்தை முடித்துக்கொண்டு படுக்கைக்கு சென்றவர் மறுநாள் காலையில் எழும்பாததைகண்டு, சந்தேகமடைந்த நண்பர்கள் அஸ்வரை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
வைத்தியர்கள் இவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்ததை அடுத்து சடலம், மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக சவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இவரின் மரணத்திற்கான வைத்திய அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
திருமணமான அஸ்வர் முஹம்மட் கடந்த 7 வருடங்களாக சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.