ஆர்யா மீது அளவு கடந்த அன்பை கொட்டும் நயன்தாரா!

397

aryaபிரபுதேவாவை விட்டு நயன்தாரா பிரிந்து வந்த நேரத்தில் அவர் சென்னையில் தங்குவதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தவர் ஆர்யாதான். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பினால்தான் இதையெல்லாம் செய்தார் ஆர்யா.

அதனால், அதுவரை ஒரு சக நடிகர் என்ற முறையில் மட்டுமே ஆர்யாவுடன் பழகி வந்த நயன்தாரா, பின்னர் அதிக நெருக்கமானார். தான் மனம்விட்டு பேசுவதற்கேற்ற ஒரு நல்ல நண்பேன்டா இவர்தான் என்று நட்பை இன்னும் ஆழப்படுத்தினார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதையடுத்து நயன்தாரா மீது ஏற்பட்ட அபிமானத்தினால் ராஜாராணி படத்திற்கும் அவரை நடிக்க வைத்தார் ஆர்யா. மேலும், அஜீத்தின் ஆரம்பம் படத்திலும் அவர்கள் நடித்திருந்தனர்.

இப்படி ஆர்யா-நயன்தாரா இருவரும் நடித்த மூன்று படங்களுமே வெற்றி பெற்று விட்டதால், எதிர்காலத்தில் அவருடன் நிறைய படங்களில் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறார் ஆர்யா.



அதோடு, இதுவரை என்னுடன் எத்தனை நடிகைகள் ஜோடி சேர்ந்திருந்தாலும், எனக்கு மிகப்பொருத்தமான நடிகை நயன்தாரா மட்டுமே என்று அவர் ஓப்பனாக பேசியதையடுத்து ஆர்யா மீது இன்னும் அளவுகடந்த அன்பை கொட்டத் தொடங்கியிருக்கிறாராம் நயன்தாரா.

அடுத்து தன்னிடம் கதை சொல்லிவிட்டு கால்சீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர்களிடம் ஆர்யாவும் நானும் நடித்த எல்லா படங்களுமே ஹிட். அதனால் அவரை ஹீரோவாக்கினால் படத்தின் வெற்றி இப்போதே உறுதியாகி விடும் என்று சொல்லி, அவருடன் மீண்டும் நடிப்பதற்கான சூழலை உருவாக்கி வருகிறாராம் நயன்தாரா.