சீனாவில் டியாங்ஹூ நகரிலுள்ள இன்டெர்நெட் மையத்தில் வாடிக்கையாளர்களை பரவசப்படுத்த பிகினி உடை அழகிகளை பணியமர்த்தி இருக்கிறார்கள். வீடியோ கேம் விளையாடும் ரசிகருக்கு இவர்கள் அருகில் நின்று உதவிபுரிவார்கள்.
இந்த செயலுக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் நிர்வாகியோ இதில் தவறு எதுவும் நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரே இடத்தில் பலர் குழுமி இருக்கிறார்கள் என்கிறார்.
அதுபோலவே இத்திட்டத்தை வாடிக்கையாளர்களும், பிகினி உடை அழகிகளும் வரவேற்கிறார்கள். ஹெயி டொஷியா என்ற பணிப்பெண் கூறுகையில், ‘கல்லூரி மாணவியான எனக்கு தொந்தரவு ஏற்படவில்லை. இந்த வேலை மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய வித்தியாசமான நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. கணிசமான சம்பளமும் கிடைக்கிறது என்று வாதிடுகிறார்.