கொள்ளையர்களால் குடும்பப் பெண்ணொருவரின் கை துண்டிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புளியங்குளம் குறிசுட்ட மடு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
குறிசுட்டமடு பிரதேச வீடொன்றில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதங்களுடன் மூவரடங்கிய கொள்ளை கோஷ்டியொன்று அவர்களின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதன்போது நித்திரையிலிருந்த கணவனை கயிறொன்றினால் கட்டி வைத்து விட்டு அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த குடும்பத் தலைவி கூக்குரலிட்டுள்ளார்.
அதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் அவரின் கையை வெட்டித் துண்டாக்கி விட்டு அங்கிருத்த பணம், நகை என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அதனையடுத்து சம்பவத்தில் காயமடைந்த பெண் அயலவர்களின் உதவியுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.