விமான நிலையத்தில் முதலைக் குட்டியை விட்டு சென்ற பெண்..!

481

croசிகாகோ விமான நிலையத்தில் அதிகாலை வேளையில் ஒரு முதலைக் குட்டியை விட்டு சென்ற பெண்ணை பொலிஸ் தேடி வருகிறது.

அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில், பஸ் நிலையங்கள் மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இம்மாதம் முதலாம் திகதி அதிகாலையில் ஒரு பெண் கையில் முதலை குட்டியுடன் ரயிலில் சென்ற காட்சிகளை சிகாகோ போக்குவரத்து துறை நேற்று வெளியிட்டது.

அதிகாலை 1.17 மணிக்கு ஒரு இளம்பெண் தனது கையில் முதலை குட்டியை வைத்து கொண்டு, புலாஸ்கி என்ற இடத்தில் புளூலைன் மின்சார ரயிலில் ஏறுகிறாள். முதலைக் குட்டியை ஒரு கையில் வைத்தபடி, இன்னொரு கையில் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறாள்.



மற்ற பயணிகள் முதலையை வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் செல்போனில் முதலையை படம் பிடிக்கின்றனர். இதன்பின், காலை 2.44 மணிக்கு அந்த பெண் ஓஹேர் ஸ்டாப்பில் இறங்கி, சிகாகோ விமான நிலையத்துக்குள் நுழைகிறாள்.

விமான நிலைய கேமராக்களில், முதலைக் குட்டியுடன் அந்த பெண் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிறிது நேரத்திற்கு பின் அந்த பெண் ஓஹேர் ஸ்டாப்பில் நிற்கிறாள். அவளது கையில் முதலைக் குட்டி இல்லை. விமான நிலையத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தின் அருகே எஸ்கலேட்டருக்கு கீழே முதலைக் குட்டி இருப்பதை ஒரு ஊழியர் கண்டுபிடித்து, பின்னர் அதை பிடித்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்த காட்சிகளை வரிசைப்படுத்தி வெளியிட்ட போக்குவரத்து துறை, இது பற்றி பொலிசுக்கும் தகவல் கொடுத்துள்ளது. தற்போது அந்த பெண்ணை பொலிஸ் தேடி வருகிறது.

விலங்குகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.