நாட்டின் பொது மக்கள் தான் எமது பெறுமதிமிக்க சொத்து என்பதை மறந்து விட முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாமரை தடாக அரங்கில் இன்று அரம்பமான 23வது பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டின் ஆரம்ப உரையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பொது வறுமை பிரச்சினை குறித்து பொதுநலவாய அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உணவு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை குறைத்து மதித்து அரசியல் பிரச்சினைகளை பற்றி கவனம் செலுத்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2007ம் ஆண்டு 15.2% காணப்பட்ட நாட்டின் ஏழ்மை யுத்தம் முடிந்துள்ள நிலையில் இன்று 6.5% குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்மூலம் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் இடைக்கால இலக்கை கடந்து பயணித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
யுத்தத்தின் பின்னர் நிலையான நல்லிணக்கம் மற்றும் சமரசத்தை நோக்கிச் நேர்மையான அணுகுமுறையில் சென்று கொண்டிருப்பதாகவும் நாட்டில் அனைத்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் உரிமை மதிப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்