பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக இலங்கைக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதை தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தான் போர் குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசிடம் கேள்வி எழுப்புவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் லண்டனில் புலம்பெயர் தமிழர்களிடம் உறுதியளித்திருந்தார்.
இலங்கை தற்பொழுதும் பிரித்தானியாவின் காலனித்துவ நாடல்ல என இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளது.
அதேவேளை போர் குற்றங்கள் தொடர்பில் தனியாக பேச்சுவார்த்தைகளை நடத்த பிரித்தானிய பிரதமர் கமரூன் விடுத்த கோரிக்கை இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் ஈராக்கில் போர் குற்றங்களை செய்துள்ளது. இந்த நிலைமையில் பிரித்தானியா இலங்கையிடம் கேள்வி எழுப்பும் உரிமையில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.