இலங்கைக்கு கடும் செய்தி ஒன்றை கூறப்போவது உறுதி – டேவிட் கமரூன்..!

410

davidஇலங்கைக்கு கடும் செய்தி ஒன்றை கூறப்போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பிபிசிக்கு அளித்த செவ்வியில் அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ள அவர்ää2009 ஆம் ஆண்டு இறுதிப்போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராயவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டின் இறுதிப்போரின் போது பொதுமக்கள் இலக்குவைக்கப்பட்டமைக்கான ஆதார குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.



அது தொடர்பில் உரிய கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில்சொல்லவேண்டும்.

இலங்கையில் இந்த பிரச்சினை தொடர்பில் சாதகமான பக்கமும் பாதகமான பக்கமும் உள்ளன.

வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்தியமைää மற்றும் சொந்தமாக நல்லிணக்க ஆணைக்குழு என்பவற்றை அமைத்தமை இலங்கை அரசாங்கத்தின் சாதக நடவடிக்கைகளாகும்.

எனினும் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பாதக தன்மைகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பப்படும் என்று கெமரோன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரித்தானிய பிரதமருக்கு இந்த விடயம் குறித்து பேசமுடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

தமிழர் பிரச்சினையை பேசுவதற்காக அவர் அழைக்கப்படவில்லை என்று இலங்கையின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.