த்ரிஷாவை கவர்ந்த விளம்பரம்..!

393

trishaநகைக்கடை விளம்பரத்தை பார்த்து நெகிழ்ந்து போயுள்ளாராம் த்ரிஷா.

சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்றில் ஒரு விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் மணமகன், அந்தப் பெண்ணின் இளம் மகளையும் தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறான்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதைப் பார்த்து நெகிழ்ந்த த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், தனது ரசிகர்கள் இதுபோன்ற திருமணங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மேலும் பெண்கள், ஆண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்வதுபோல, ஆண்களும் பெண்களின் இரண்டாம் திருமணத்தை ஏற்பதுதான் சிறந்தது என்று கூறியுள்ளார்.



த்ரிஷா இதற்கு முன்னதாக தெரு நாய்களின் பராமரிப்பு குறித்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.