குண்டான இளைஞனுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் கப்பலில் செல்ல முடிவு செய்துள்ளார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிலிருந்து கெவின் செனைஸ் என்ற இளைஞனும், அவனது பெற்றோரும் அமெரிக்கா வந்தனர்.
மேயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெவின், சிகிச்சை முடிந்ததும் தனது பெற்றோருடன் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் 20 வயதான கெவினுக்கு உடலில் ஏற்பட்ட ஹார்மோன் கோளாறால் உடல் எடை கூடியது.
அதன் விளைவாக கெவினின் எடை 500 பவுண்டானதால் விமான பயணத்திற்கு பிரிட்டிஷ் விமான நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது.
மேலும் கெவினுக்கு எந்த நேரமும் மருத்துவ உதவியும், பிராணவாயுக் கருவியும் தேவைப்படும் என்பதால் பயணம் செய்யும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் சமாளிக்க முடியாது எனவும் காரணம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு வாரம் ஒட்டலில் தங்கியிருந்த கெவினின் குடும்பம் மேற்கொண்டு செலவு செய்வதற்கு இயலாமல் ரயில் மூலம் நியூயார்க் சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக பிரான்ஸ் செல்ல முடிவு செய்தனர்.
இதனையடுத்து நேற்று நியூயார்க்கு வந்த இளைஞன் கெவின், வருகிற 19ம் திகதி இங்கிலாந்து செல்கின்ற கப்பலில் திரும்ப உள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் விமான நிறுவனம் மறுத்த போது, ஏர் பிரான்ஸ் மற்றும் சுவிஸ் ஏர் போன்ற விமான நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு உதவி செய்ய முன் வந்ததாகவும், பணம் இல்லாத காரணத்தால் இவற்றை நிராகரித்ததாகவும் கெவினின் தந்தை கூறியுள்ளார்.