வவுனியா பஸ்நிலைய வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் முடிவு ..!

653

சில தினங்களுக்கு முன்னர் வவுனியா பஸ் நிலையத்துக்குள் அரச பேரூந்து தவிர்ந்த வேறு வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய வாகங்கள் மட்டுமல்லாது, மோட்டார் வண்டிகள் மற்றும் சைக்கிள்கள் கூட உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப் பட்டது.

இத் தடை மூலம் தமது அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பஸ்நிலைய வியாபாரிகள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த நிலையில் வவுனியா பஸ் நிலைய வியாபாரிகள் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்தனர். இன்று காலை பஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கடைகள் எதுவும் வழமைபோன்று திறக்கப்படவில்லை.

தற்பொழுது கிடைத்த செய்திகளின்படி வவுனியா நகரசபை அதிகாரிகளில் சமரசத்தை அடுத்து கடைகள் மீண்டும் திறக்கக் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.



-வவுனியாநெற் நிருபர் –

busstand

bustand2