வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்ற இலங்கையர் 3 முதல் 5 இலட்சம் பேர் வரை ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர்.
அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக இலங்கை வர விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ளோர் அங்கு பிரஜாவுரிமை பெற்ற பின்னர் இலங்கை பிரஜா உரிமை இரத்தாகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான இலங்கையரின் கோரிக்கையின் பேரில் புதிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ஒரு இலட்சம் பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.