யாழ். நயீனாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் பொதுக்கிணறு வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா கனகராசா அவர்கள் 19-04-2017 புதன்கிழமை அன்று காலமானார். கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சிதம்பரபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
புனிதவதி, மகேந்திரராஜா, செல்வதி, காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அழகேசன்(கணக்காளர்- இலங்கை போக்குவரத்துச்சபை- வட பிராந்தியம்), அரங்கேசன்(இலங்கை போக்கு வரத்துச் சபை வவுனியா), அரவிந்தன்(பிரான்ஸ்), ரமேசன்(ஸ்ரீலங்கா ரெலிக்கொம்), லிங்கேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரி(கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், வவுனியா), நவரஞ்சினி(பிரதேச சபை – நயீனாதீவு), மைதிலி(பிரான்ஸ்), பிரசாந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவநீதன், லக்ஸ்வீணன், சஷ்மிளா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல : 142C,
பொதுக்கிணறு வீதி,
தோணிக்கல்,
வவுனியா. |