பள்ளிக்கூட வகுப்பறையில் இளம் ஆசிரியை உட்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்! வீபரீத காரணம்!!

459


மெக்சிகோ நாட்டின் Monterrey நகரில் ஒரு புகழ்பெற்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. எப்போதும் போல நேற்றும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது.அப்போது வகுப்பறையில் இருந்த மாணவன் Federico Guevara (15) தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சராமரியாக சுட்டுள்ளான்.

இதில் வகுப்பாசிரியை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் அவர்கள் மயங்கி கீழே விழுந்தனர்.மற்ற மாணவர்கள் வகுப்பறையிலிருந்த பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொண்டனர். சிலர் வெளியில் தப்பித்து ஓடினார்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பின்னர் மாணவன் Federico தன் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னையே சுட்டு கொண்டு கீழே இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளான்.பின்னர் அங்கு வந்த பொலிசார் எல்லோரையும் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.இது குறித்து பொலிசார் கூறுகையில், தன்னையே சுட்டு கொண்ட மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளான். மற்றவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Federico என்னும் இந்த மாணவனுக்கு மனநல கோளாறு இருந்துள்ளது. அதற்காக அவன் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளான்.துப்பாக்கி அவனுக்கு எப்படி கிடைத்தது மற்றும் இந்த கொலை வெறி தாக்குதலுக்கு வேறு எதாவது காரணமா என விசாரித்து வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளார்கள்.