இரு வேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்

549

குருணாகல் கும்புகெட்டே பிரதேசத்திலிருந்து இப்பாகமுவ வரை பயணித்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் வாகன சாரதியை பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தோடம்கஸ்லந்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இது குறித்து கும்புகெட்டே பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.மேலும், தெல்கொடை – கப்புகொடை கிரிதரை பாதையில் தொம்பை பிரதேசத்திலே இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டிப் பாதையில் மிதி வண்டி பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட போது உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் தொம்பை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து தொம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.