வவுனியாவில் கடை உடைத்து திருட்டு

628

வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையினை உடைத்து 500,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேவேளை வவுனியாவில் அண்மைக்காலமாக வியாபாரநிலையங்கள், வழிபாட்டிடங்கள் மற்றும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.