100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்!!

511

1

இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். அதன்பிறகு 2 முறை அவரை ஒரு நாகம் கடித்தது. ஆனால் உடலில் வி‌ஷம் ஏறவில்லை.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதேபோல் வி‌ஷ ஊசி போட்டும் சாகவில்லை. இதையடுத்து அவரது உடல் எந்த வி‌ஷத்தையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி பெற்றது. கடந்த 16 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட வி‌ஷ பாம்புகளை கடிக்க விட்டுள்ளார். வி‌ஷ ஊசிகளும் போட்டுள்ளார். ஆனால் மரணம் அவரை நெருங்க முடியவில்லை.

இவரை பார்த்து விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். இவரது உடலை வைத்து பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். வி‌ஷ மனிதனுக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின்புதான் டிம் இந்த வி‌ஷ பரீட்சையில் இறங்கி இருக்கிறார்.



உலகில் எந்தவித கொடிய வி‌ஷப்பாம்பாக இருந்தாலும் கடிக்க விடுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார்.

2